Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தலையில் கல்லை போட்டு ஐடிஐ மாணவர் எரித்துக் கொலை

மதுரை: மதுரை மாவட்டம், இளமனூர் அருகில் உள்ள கண்மாய் கரையில் பாதி எரிந்த நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. இதையடுத்து சிலைமான் போலீசார் சென்று விசாரித்தனர். கொலையானவரின் உடல் அருகே ரத்தக்கறை படிந்த கல் ஒன்று கிடந்தது. பாதி எரிந்த நிலையில் கிடந்த சடலத்தை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

வாலிபரை தலையில் கல்லை ேபாட்டு கொன்று விட்டு, தீ வைத்து எரித்து இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.  மதுரை நகர், புறநகர் பகுதியில் சமீபத்தில் மாயமாகி, தேடப்படும் நபர்கள் குறித்த விபரங்களை போலீசார் சேகரித்து வந்தனர். எரிக்கப்பட்ட வாலிபர் குறித்து துப்பு துலங்கியது. அவர், மதுரை மாவட்டம், ஒத்தக்கடை, சுதந்திரா நகரை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மகனான ஐடிஐ மாணவர் பிரசன்னா (17) எனத் தெரிந்தது.

சடலம் அருகே கிடந்த சட்டையின் ஒரு பகுதி மற்றும் விரல்கள், செருப்பு ஆகியவற்றை அடையாளமாக வைத்து, இறந்தது பிரசன்னா என்பதை அவரது பெற்றோர் உறுதி செய்து போலீசாரிடம் தெரிவித்தனர். மாணவர் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.