*சிறுமியிடம் அத்துமீறிய முதியவர் கைது
நெய்வேலி : நெய்வேலி அடுத்த மந்தாரக்குப்பம் திருவள்ளுவர் நகர் 3வது தெருவை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் மகன் கிருஷ்ணமூர்த்தி (எ) சின்னா (22). இவர் 16 வயது சிறுமியிடம் பழகி வந்துள்ளார். அப்போது சிறுமியிடம் உன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி, அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி தற்போது 8 மாத கர்ப்பமாக உள்ளார்.
இது குறித்து அறிந்த சிறுமியின் தாய் நெய்வேலி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், சின்னாவை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.வேப்பூர்: வேப்பூர் அடுத்த மேலக்குறிச்சியை சேர்ந்தவர் சாமிவேல்(58), டேங்க் ஆப்ரேட்டராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று இவர் விளையாடி கொண்டிருந்த 10 வயது சிறுமியை அவரது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து புகாரின் பேரில், சாமிவேலை போக்சோ சட்டத்தின் கீழ் சிறுபாக்கம் போலீசார் கைது செய்தனர்.