Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் மிகவும் குறைவாக நடைபெறும் மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு இருக்கிறது: DGPயின் நேர்காணலைப் பதிவிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் மிகவும் குறைவாக நடைபெறும் மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு இருக்கிறது என DGP சங்கர் ஜிவாளின் நேர்காணலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டில் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான வன்முறை பெருகிவிட்டதாகப் பரப்பப்படும் அடிப்படையற்ற விஷமப் பிரசாரங்களுக்கு பதிலடி தரும் வகையில் அமைந்துள்ள தமிழ்நாடு DGPயின் நேர்காணலைப் பகிர்கிறேன்.

* NCRB தரவுகளின்படி குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் மிகவும் குறைவாக நடைபெறும் மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு இருக்கிறது.

*அதேநேரம், POCSO குற்றங்களை எந்தவித அச்சமும் இல்லாமல், காவல்நிலையத்தில் நம்பிக்கையோடு புகாரளிக்கும் விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது.

* அச்சமின்றிப் புகாரளித்தால்தான், குற்றவாளியை முதல் குற்றத்தின்போதே கைதுசெய்து தண்டனை பெற்றுத்தரமுடியும். இத்தகைய நபர்கள் மேலும் குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க இது மிக அவசியம்.

* ஏற்கெனவே நான் கூறியது போல, குழந்தைகள் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ZeroTolerance - விரைவான விசாரணை - அதிகபட்ச தண்டனை - முன்விடுதலை இல்லை என்பதே நமது அரசின் policy இவ்வாறு கூறியிருந்தார்.