முதல்தர கிரிக்கெட்டில் மாயாஜாலம் 11 பந்துகளில் 50 ரன் ஆகாஷ் உலக சாதனை: தொடர்ந்து 8 பந்துகளில் சிக்சர் மழை
சூரத்: ரஞ்சி கோப்பை பிளேட் பிரிவு போட்டியில் மேகாலயா அணிக்காக ஆடிய ஆகாஷ் குமார், 11 பந்துகளில் 50 ரன் விளாசி, முதல் தர கிரிக்கெட்டில் அதிவிரைவு அரை சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். ரஞ்சி கோப்பை பிளேட் பிரிவில் அருணாசலப்பிரதேசம் - மேகாலயா அணிகள் மோதின. முதலில் ஆடிய மேகாலயா 6 விக்கெட் இழப்புக்கு 628 ரன் குவித்து டிக்ளேர் செய்தது.
அந்த அணியின் ஆகாஷ் சவுத்ரி, 8வது வீரராக களமிறஙகி, 11 பந்துகளில் 50 ரன் விளாசி, முதல் தர கிரிக்கெட்டில் அதிவேக அரை சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்தார். அந்த அரை சதத்தில், 8 பந்துகளில் தொடர்ச்சியாக விளாசிய 8 சிக்சர்களும் அடங்கும். இதற்கு முன், 2012ல், எசெக்ஸ் அணிக்கு எதிராக லெசெஸ்டெர்ஷைர் அணிக்காக ஆடிய இங்கிலாந்தின் வெயின் வைட் 12 பந்துகளில் அரை சதம் விளாசியதே இதுவரை சாதனையாக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

