டெல்லி: ஒரு இன்னிங்ஸிற்கு 20 ஓவர்கள் என 4 இன்னிங்ஸ் (80 ஓவர்கள்) விளையாடும் புதிய ஃபார்மட் கிரிக்கெட் அடுத்தாண்டு ஜனவரியில் அறிமுகமாகிறது. தொழில்முனைவோர் கௌரவ் பஹிர்வானி இதனை அறிவித்துள்ளார். இதன் ஆலோசனைக் குழுவில் ஏபி டிவில்லியர்ஸ், கிளைவ் லாயிட், மேத்யூ ஹேடன் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் உள்ளனர். 13 முதல் 19 வயதினரை மனதில் வைத்து இந்த ஃபார்மட் உருவாக்கப்பட்டுள்ளது.
+
Advertisement