சென்னை: மனித ஆற்றலை மழுங்கடித்து ஒட்டுமொத்த சமூகத்திற்கும் பெருங்கேடு விளைவிக்கும் போதைப் பொருட்களை தவிர்ப்பதன் அவசியத்தை வலியுறுத்தி நடைபெற்ற, ‘போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு’ எனும் மாநில அளவிலான பெருந்திரள் விழிப்புணர்வு நிகழ்ச்சியை சென்னை நந்தனம் அரசுக் கலைக்கல்லூரியில் இன்று தொடங்கி வைத்து, உறுதிமொழியேற்றோம்.
தமிழ்நாடு முழுவதுமிருந்து காணொலி வாயிலாக இணைந்த மாணவர்கள், போதைப் பொருட்களை தவிர்ப்போமென உறுதியேற்றனர். தமிழ்நாட்டில் போதைப்பொருள் உற்பத்தி மற்றும் சட்டவிரோதக் கடத்தலை ஒழிப்பது மற்றும் போதைப் பொருள் வழக்குகளில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறை அலுவலர்கள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு 2025 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் காவலர் சிறப்பு பதக்கங்களை வழங்கினோம்.
போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போதை பொருள் எதிர்ப்பு மன்றம் அமைத்து மாநில அளவில் சிறப்பாக செயல்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களிடையே வெற்றிக்கோப்பை, சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகை காசோலைகளையும் வழங்கி வாழ்த்தினோம். போதைப் பொருளுக்கு எதிரான இந்த உறுதிமொழியை ஒவ்வொருவரும் கடைப்பிடிப்பது அவசியம்.