சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சீர்திருத்தம் என்ற பெயரில் பீகாரில் 65 லட்சம் பெயர்களை நீக்கியுள்ள தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளை கண்டித்து இன்று (8ம்தேதி) தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும். சென்னையில் இன்று மாலை 5.30 மணிக்கு மிண்ட் பேருந்து நிலையம், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் வாசுகி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. திருவாரூரில் இன்று காலை 10 மணிக்கு பழைய பேருந்து நிலையம் அருகில் மாநில செயலாளர் பெ.சண்முகம் தலைமையிலும், நடக்கிறது. இது தவிர தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றன.
+
Advertisement