வால்பாறை : வால்பாறை மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக அவ்வபோது வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தேயிலை தோட்டங்கள், சாலையோர மரங்கள், மலைச்சரிவுகளில் மூடுபனி சூழ்ந்து ரம்மியமாக காட்சியளிக்கிறது.
இதனை வால்பாறைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள், புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர். மூடுபனி காரணமாக வால்பாறை-பொள்ளாச்சி மலைச்சாலையில் உள்ள கவர்கல் பகுதியில் செல்லும்போது வாகனங்களில் முகப்பு விளக்கை எரிய விட்டவாறு மெதுவாகச் செல்லுமாறு வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.
