நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் வகையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தவருக்கு ரூ.1 லட்சம் அபராதம்: ஐகோர்ட் உத்தரவு
சென்னை: நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் வகையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், முறையான ஆய்வுகளை மேற்கொண்ட பின், பொதுநல வழக்குகளை தாக்கல் செய்ய வேண்டும். முறையான ஆய்வுகளை மேற்கொள்ளாமல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர் கோலப்பன் சேரியில் விதிகளை மீறி பெட்ரோல் பங்க் அமைக்கப்பட்டுள்ளதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மனுதாரர் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை எனக் கூறி வழக்கை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.