Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கோர்ட் உத்தரவால் பாதிக்கப்படவில்லை; ஆசிர்வதிக்கப் பட்டிருக்கிறீர்கள்: நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கருத்து

மதுரை: கோர்ட் உத்தரவால் பாதிக்கப்படவில்லை; ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கருத்து தெரிவித்துள்ளார். தீபம் ஏற்றும் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை விசாரித்த பிறகு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரிக்க வேண்டும். உணர்வுப் பூர்வமான விஷயம் என்பதால் வழக்கை ஒத்திவைக்க வேண்டும்; 4 வாரம் கால அவகாசம் அளிக்க வேண்டும்; சட்டப்படி உரிய பதில் அளிப்போம் என அரசு தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. தனி நீதிபதி பேசுகையில், எனது உத்தரவால் யாரும் பாதிக்கப்படவில்லை; ஆசிர்வதிக்கப் பட்டிருக்கிறீர்கள். திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற முன்னேற்பாடு செய்யாத அலுவலர்கள் மீது வழக்கு தொடரப்படும். திருப்பரங்குன்றம் கோயிலின் செயல் அலுவலர் உடனடியாக காணொலி வாயிலாக ஆஜராக வேண்டும்; நீதிமன்றத்தின் மதிப்பு புரிய வேண்டும் என்பதற்காகவே இதனைச் செய்கிறேன். மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகரக் காவல் ஆணையர் காணொலி வழியே ஆஜராக தனி நீதிபதி உத்தரவிட்டார்.