சிந்த்வாரா: மத்திய பிரதேச மாநிலத்தில் கோல்டிரிப் எனும் இருமல் மருந்து குடித்த 24 குழந்தைகள் பலியான விவகாரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் கலப்பட இருமல் மருந்தை பரிந்துரைத்ததாக கூறப்படும் சிந்த்வாராவைச் சேர்ந்த டாக்டர் பிரவீன் சோனி ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், டாக்டர் சோனியின் மனைவி ஜோதி சோனியை சிறப்பு புலனாய்வு குழு போலீசார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். இவர் நடத்தி வந்த மருந்து கடையில் தான் கோல்டிரிப் மருந்து விற்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில், இதுவரை 7 பேர் கைதாகி உள்ளனர்.
+
Advertisement
