போபால்: தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட கோல்ட்ரிப் இருமல் மருந்தை சாப்பிட்ட 22 குழந்தைகள் மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் பலியானது நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து கோல்ட்ரிப் மருந்தை தயாரித்த ஸ்ரேசன் பார்மா நிறுவனத்தின் உரிமையாளர் ஜி ரங்கநாதன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த பிரச்னை தொடர்பாக மபி காங்கிரஸ் தலைவர் ஜிது பட்வாரி கூறுகையில்,’ கடந்த மூன்று மாதங்களில், மபியில் பல்வேறு மாவட்டங்களில் 150க்கும் மேற்பட்ட குழந்தைகளின் இறப்புகள் பதிவாகியுள்ளன. அவை எந்த நோயாலும் ஏற்படவில்லை, மாறாக அரசாங்கத்தால் செய்யப்பட்ட கொலைகள். இந்த விவகாரத்தில் மபி சுகாதார அமைச்சரும், துணை முதல்வருமான ராஜேந்திர சுக்லா ராஜினாமா செய்ய வேண்டும். மருந்து கட்டுப்பாட்டாளர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் ’ என்று அவர் கோரினார்.