Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

பருத்தி விளைச்சலில் பெயர் பெற்ற பெரம்பலூரில் பன்னீர் திராட்சை சாகுபடி அதிகரிப்பு

*தோட்டத்துக்கே வந்து வாங்கி செல்லும் வாடிக்கையாளர்கள்

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம் மானாவாரி பயிர் சாகுபடியை நம்பியுள்ள மாவட்டமாகும். இங்கு தமிழகத்திலேயே மிக அதிகபட்சமாக மக்காச் சோளம், பருத்தி, சின்ன வெங்காயம் ஆகிய பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக மாநிலஅளவில் முதலிடம் பெற்று வருகிறது.

ஒன்றரை லட்சம் ஏக்கர் பரப்பளவுக்கு மேலாக மக்காச்சோளமும், 10 முதல் 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சின்ன வெங்காயமும் சாகுபடி செய்யப்பட்டு வரும் நிலையில், ஆண்டு தோறும் பருத்தி மட்டுமே அதிகப் பட்சமாக 40ஆயிரம் முதல் 50ஆயிரம் ஏக்கர் வரை பயிரி டப்பட்டு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

பருத்தி சாகுபடிக்கு பெயர் பெற்ற பெரம்பலூர் மாவட்டத்தில், பன்னீர் திராட்சை சாகுபடியும் பரபரப்பாக நடைபெற்று வருவது பக்கத்து மாவட்டத்தினருக்கு ஆச்சரியமான விஷயமாகும்.

இங்கு ஆரம்பத்தில் நக்கசேலம், மலையாளப் பட்டி, எளம்பலூர், கோனேரி பாளையம், எசனை ஆகிய பகுதிகளில் தலா ஒரு ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப் பட்டுவந்த பன்னீர்த் திராட்சை,கடந்த 8 வருடங்களாக எசனையைச் சேர்ந்த ராஜகோபால் மகனான பெருமாள் என்கிற சுருளிராஜன் (52) என்பவரால் மட்டுமே தொடர்ந்து சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

குறிப்பாக 2018 முதல் பெரம்பலூர் ஆத்தூர் சாலையில் ஏரிக்கரை வளைவு அருகே, அரசலூர் பிரிவு ரோட்டுக்கு எதிரே உள்ள தனது சொந்த வயலில் 2 இடங்களில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் இயற்கை முறையில் ரசாயனக் கலப்பின்றி பன்னீர் திராட்சை பக்குவமாக சாகுபடி செய்து வருகிறார்.

இதற்காக தேனி மாவட்டத்திலிருந்து விதை வாங்கி வந்து கல்தூண் பந்தல் அமைத்து, பல்வேறு நுண்ணூட்டச் சத்துக்களைக் கொண்ட நியூட்ரிக் சத்து செலுத்தி, பார்த்தாலே அதன் ருசியை அறியக்கூடிய வகையில் பளபளக்கும் பன்னீர் திராட்சையை ஆண்டு தோறும் அறுவடை செய்து வருகிறார்.

அறுவடை செய்த திராட்சையை எங்கும் வாகனங்களில் எடுத்துச் சென்று விற்கத் தேவை இன்றி, பெரம்பலூர் ஆத்தூர் நெடுஞ்சாலை ஓரத்திலேயே வயல் இருப்பதால் கூடை கூடையாக குவித்து வைக்கப் படும் திராட்சையை கூவிக் கூவி விற்கத் தேவையின்றி வாகன ஓட்டிகளே வந்து வாங்கிச் செல்லுகின்றனர்.

இருந்தும் ஆர்டரின் பெயரில் நடப்பு அறுவடையில் சென்னைக்கும் பன்னீர் திராட்சையை பார்சல் செய்து அனுப்ப திட்டமிட்டுள்ளார். சுருளிராஜன் கிலோ 120 க்கு விற்கும் இந்த பன்னீர் திராட்சை, சென்னையில் ஷோரூம்களில் கிலோ 300க்கு விற்கப் படுவதாக சுருளி ராஜன் தெரிவித்துள்ளார்.

நல்ல ருசிக்காகவே கடந்த ஏழு எட்டு வருடங்களாக வாடிக்கையாளர்கள் தேடி வந்து பன்னீர் திராட்சையை பலரும் வாங்கி செல்வதால் இழப்புகள் ஏதுமின்றி தொடர்ந்து திராட்சை சாகுபடியில் தீவிரம் செலுத்தி வருகிறார். இதனை இரு சக்கர இரு சக்கர வாகனத்தில் செல்லும் குடும்பத்தார் இறங்கி வந்து பந்தலுக்குள் புகுந்து பழக்கொத்துகளுக்கு இடையே பரவசமாக செல்பி எடுத்தும் செல்லுகின்றனர்.