கொழும்பு: ரணில் விக்ரம சிங்கே இலங்கை அதிபராக கடந்த 2022ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரை பதவி வகித்தார். ரணில் விக்ரம சிங்கேவின் மனைவி பேராசிரியை மைத்ரியின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிரிட்டன் சென்றார்.
அப்போது பிரிட்டன் செல்வதற்காக அரசு நிதியை ரணில் விக்ரம சிங்கே தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் ரணில் விக்ரமசிங்கே(76) கடந்த 22ம் தேதி கைது செய்யப்பட்டு, நேற்று வரை நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு கொழும்பு நீதிமன்றம் நேற்று அவரை ஜாமீனில் விடுதலை செய்தது.