சென்னை: ரூ.98.25 கோடி முறைகேடு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். சென்னை, கோவை மாநகராட்சிகளில் ஒப்பந்தங்கள் வழங்கியதில் ரூ.98.25 கோடி முறைகேடு செய்யப்பட்ட வழக்கில் எஸ்.பி.வேலுமணி மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளதாக ஐகோர்ட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை தகவல் தெரிவித்துள்ளது. எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக ஆதாரங்கள் உள்ளதால் அவர் மீது வழக்கு தொடர கடந்த 2024-ல் சபாநாயகர் அனுமதி அளித்திருந்தார். இந்நிலையில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக ஆதாரங்கள் உள்ளதாக மீண்டும் வழக்குப் பதிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
+
Advertisement