சென்னை: சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய நடப்பு அரையாண்டிற்குரிய (I/2025-26) சொத்து வரியை, சொத்து உரிமையாளர்கள் வரும் 30ம் தேதிக்குள் செலுத்தி, தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம், 1998, பிரிவு-84(2)ன்படி, மாதம்தோறும் விதிக்கப்படும் தனிவட்டி விதிப்பை தவிர்க்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்து வரியை பெருநகர சென்னை மாநகராட்சி வரி வசூலிப்பாளர்கள், அரசு இ-சேவை மையங்கள், இணையதளம் மூலமாகவும் மற்றும் RTGS/ NEFT, Pay-tm, நம்ம சென்னை செயலி, கிரெடிட், டெபிட், யுபிஐ சர்வீஸ், சென்னை மாநகராட்சி வருவாய் துறையில் உள்ள காசோலை இயந்திரம் மூலமாகவும், மாநகராட்சியால் குறிப்பிட்ட அரசு அலுவலகங்களில் பொருத்தப்பட்ட க்யூ.ஆர் கோடு மூலமாகவும் மற்றும் வாட்ஸ்அப் எண்.9445061913 மூலமாகவும் செலுத்தலாம். சொத்து உரிமையாளர்கள் மாநகராட்சிக்கு சொத்து வரியை உடனடியாக செலுத்தி, சென்னை மாநகர வளர்ச்சிப் பணிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.