கூட்டுறவு சங்கங்களில் இனிமேல் பெண்களுக்கு 2 இடங்கள் எஸ்சி, எஸ்டிக்கு ஒரு இடம்: ராகுல்காந்தி கேள்விக்கு அமித்ஷா பதில்
புதுடெல்லி: கூட்டுறவுத் துறையில் எஸ்சி, எஸ்டி பங்களிப்பை அதிகரிப்பது குறித்த மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியின் கேள்விகளுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா அளித்த எழுத்துப்பூர்வ பதில்: மாநில கூட்டுறவு சங்கங்களின் வாரியங்களில் பெண்களுக்கு இரண்டு இடங்கள் மற்றும் பட்டியல் சாதியினர் அல்லது பட்டியல் பழங்குடியினருக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அனைத்து மாநிலங்களுக்கும் மாதிரி துணைச் சட்டங்களில் அரசு இதே போன்ற விதிகளை இணைத்துள்ளது. இந்த நடவடிக்கைகள் பெண்கள் மற்றும் எஸ்சி, எஸ்டி சமூகங்களுக்கு போதுமான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும். இவ்வாறு தெரிவித்தார்.