குன்னூரில் அதிக ஊக்க மருந்து எடுத்து இளைஞர் தற்கொலை செய்துகொண்ட வழக்கை தற்கொலைக்கு தூண்டுதல் வழக்காக மாற்றியது போலீஸ்
குன்னூர்: குன்னூரில் அதிக ஊக்க மருந்து எடுத்து இளைஞர் ராஜேஷ் கண்ணா தற்கொலை செய்துகொண்ட வழக்கை தற்கொலைக்கு தூண்டுதல் வழக்காக மாற்றி உடற்பயிற்சி நிலைய உரிமையாளர் சிவகுமாரை போலீசார் தேடி வருகின்றனர். குன்னூர் உடற்பயிற்சி நிலையத்தில் அதிக அளவில் ஊக்க மருந்து எடுத்ததால் இளைஞர் ராஜேஷ் கண்ணாவுக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டது. உடல் நலம் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் இளைஞர் ராஜேஷ் கண்ணா தற்கொலை செய்துகொண்டார். ராஜேஷ் கண்ணா தற்கொலை வழக்கை தற்கொலைக்கு தூண்டுதல் வழக்காக மாற்றி போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.