Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

டாலடிக்கும் கலரு கண்ணாடி!

மூக்கு கண்ணாடி தேர்ந்தெடுப்பின்போது அணிந்து பார்த்து நீண்ட நேர முயற்சிக்குப் பின் நமக்கு பிடித்ததை தேர்ந்தெடுப்போம். அந்த கண்ணாடி நம் முகத்துக்கு ஒத்துப் போகாமல் காட்சியளிக்கும் போது நேரம் மற்றும் முயற்சி வீணாகும். அப்படியே விலை அதிகம் கொடுத்து வாங்கினாலும் கூட இந்த வடிவம் உனக்குப் பொருந்தவில்லை என நண்பர்கள் சொல்லும்போதுதான் அடடே! என நமக்கு அலெர்ட் ஆகும். முக அமைப்புக்கேற்ற மூக்குக்கண்ணாடி மற்றும் சன் கிளாசஸ்களை எப்படி தேர்ந்தெடுக்கலாம்?! கண்ணாடிகளை நம் முக வடிவத்துக்கு ஏற்பதான் தேர்வு செய்ய வேண்டும்.

கண்ணாடியின்

அளவைக்

கண்டறிதல்

தலையை நேராக உயர்த்தி ஒரு ஏ.டி.எம். கார்டின் பக்கவாட்டுப் பகுதியை கண்களுக்குக் கீழ், மூக்கின் நடுப்பகுதியில் இருக்கும்படி வைக்கவும். ஏ.டி.எம் கார்டு முழுவதுமாக உங்கள் கண்களுக்கு மறைந்தால் உங்கள் கண்ணாடியின் அளவு எல், கார்டும் கண் அளவும் சரிசமமாக இருந்தால் கண்ணாடி அளவு ‘எம்’ கள் விட கண் அளவு சிறிதாக இருந்தால் கண்ணாடி அளவு ‘எஸ்’ ஆகும்.

சதுரவடிவ

முக அமைப்புக்கு

பரந்த நெற்றி, எலும்பு தெரியும்படியான கண்னம் ஆகிய வையே சதுர வடிவ முக அமைப்புகள் முக்கிய அம்சம். இவ்வித அமைப்பு உள்ளவர்கள் வட்டவடிவம் அல்லது ‘D’ வடிவ கண்ணாடி பயன்

படுத்தினால், முக அமைப்பு மென்மையாக காட்சியளிக்கும். மேலும், ஏவியேட்டர் வகை கண்ணாடிகள் கன்னத்தில் உள்ள சதை மற்றும் எலும்புகளை சமப்படுத்த உதவும். முக அமைப்பை சிறிதாகக் காட்ட ‘ஓவல்’ வடிவ கண்ணாடிகளையும் தேர்ந்தெடுக்கலாம். இவர்கள் கூர்மையான மூலைகளைக் கொண்ட சதுர கண்ணாடிகளைத் தவிர்ப்பது நல்லது.

வட்டவடிவ

முக அமைப்புக்கு

பரந்த கன்ன எலும்புகள், சதைப்பிடிப்பிலான கன்னம் மற்றும் சற்று குறுகிய நெற்றி, வட்ட முக அமைப்பாக வகைப்படுத்தப் படுகிறது. இவர்கள் வட்ட வடிவக் கண்ணாடிகளை தவிர்ப்பது சிறந்தது. மாறாக, கிளாசிக் ரெட்ரோஸ்டைல் வைப்பார்கள், அல்லது நீள செவ்வக வடிவ கண்ணாடிகளை முயற்சிக்கலாம். இவை வட்ட வடிவத்திற்கு அற்புதமாகப் பொருந்தும்.

நீள்வட்ட வடிவ

முக அமைப்புக்கு

நீள் வட்ட முகம் கொண்ட ஒருவருக்கு பொருந்தும் ஒரு கண்ணாடி மற்றொரு நீள் வட்ட முகம் உள்ள நபருக்குப் பொருந்தாது. எனவே கண்ணாடியை தேர்ந்தெடுக்கும் போது கவனத்துடன் இருக்க வேண்டும். செவ்வக பிரேம்கள் நீள்வட்ட வடிவமுக அம்சங்களை மெருகூட்டி காட்டும். ஆகையால் பெரிய சதுரக் கண்ணாடிகளை தேர்ந்தெடுப்பது நல்லது.

இதய வடிவ

அமைப்பினருக்கு

கிளாசிக், ஏவியேட்டர், கண்ணாடிகள் இதய வடிவ முக அமைப்பினருக்கு கச்சிதமாக பொருந்தும். உங்கள் முகவடிவத்தை இன்னும் மெருகேற்ற ‘ரிம்லெஸ்’ கண்ணாடிகளையும் அணியலாம். இந்தவகை கண்ணாடிகள் அணிய எளிதாக இருக்கும். அதே சமயம் அழகாகவும் இருக்கும். மூக்குப்பட்டைகள் கொண்ட உலோக பிரேம்கள் மற்றும் மெல்லிய பிரேம் கண்ணாடிகளை தேர்வு செய்து பயன்படுத்தலாம். பிளாஸ்ட்டிக் பிரேம்கள் உங்கள் முகத்தின் வசீகரத்தை அதிகரிக்கும். எந்த வகை பிரேமாக இருந்தாலும் லென்ஸின் அடிப்பகுதி அகலமாக இருப்பதை உறுதிப்படுத்திக் ெகாள்ளுங்கள்.

- அ.ப.ஜெயபால்