Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பட்டியலினத்தவர் பற்றி சர்ச்சை பேச்சு; நடிகர் கார்த்திக் குமார் மீதான புகார் குறித்து விசாரிக்க உத்தரவு

புதுக்கோட்டை: பட்டியலின மக்களைத் தரக்குறைவாக பேசிய நடிகர் கார்த்திக் குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அம்பேத்கர் மக்கள் இயக்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து இந்த இயக்கத்தின் செயல் தலைவர் புதுக்கோட்டையை சேர்ந்த இளமுருகு முத்து, தேசிய பட்டியலின ஆணையத்தின் தமிழ்நாடு- புதுச்சேரி இயக்குநர் எஸ்.ரவிவர்மனிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: திரைப்பட நடிகர் கார்த்திக் குமார், தனது முன்னாள் மனைவியுடன் தொலைபேசியில் பேசியதாக வெளியாகியுள்ள உரையாடலில், பட்டியலின மக்கள் குறித்து தரக்குறைவாக பேசியுள்ளார். இந்த உரையாடல் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

இது பட்டியலின சமூகத்தினரை புண்படுத்தும் வகையில் உள்ளது. எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க ஆணையம் உத்தரவிட வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து தேசிய பட்டியலின ஆணையத்தின் இயக்குநர் எஸ். ரவிவர்மன், அவரது மனுவை இணையவழிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு (சைபர் கிரைம்) ஏடிஜிபிக்கு அனுப்பி வைத்துள்ளார். 15 நாட்களுக்குள் அந்த உரையாடல் குறித்து ஆய்வுசெய்து அது குறித்தும் அதன் மீது காவல்துறை எடுத்துள்ள நடவடிக்கை குறித்தும் விரிவான அறிக்கையை பட்டியலின ஆணையத்துக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் ரவிவர்மன் குறிப்பிட்டுள்ளார்.