Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சர்ச்சையில் சிக்கிய நிர்மலா பெரியசாமி: அதிமுக பிரசாரத்தில் சலசலப்பு

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகரில் அதிமுக வேட்பாளர் பெரும்பாக்கம் ராஜசேகரை ஆதரித்து அதிமுக தலைமை கழக பேச்சாளர் நிர்மலா பெரியசாமி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவர் பேசுகையில் ஜெயலலிதா இருந்தவரை நீட் தேர்வை அனுமதிக்கவில்லை. அதன் பிறகு எடப்பாடியார் ஆட்சி காலத்தில் எவ்வளவு முயன்றும் அவரால் தடுக்க முடியவில்லை. இதனால் ஏழை மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என எண்ணி அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு கொண்டு வந்தார். இதன் காரணமாக சாதாரண குடும்பங்களை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் பயன்பெற்றனர். நகரங்களில் உள்ள சேரி ஏரியாக்கள், கிராமங்கள், குக்கிராமங்களின் சேரி பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவர்களின் டாக்டர் கனவு நிறைவேறியது என்றார். சேரி என குறிப்பிட்டு அவர் பேசியது தற்போது சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.

* பால் கனக்ராஜ் நல்லா படைச்சவரு.. சட்டம் படைச்சவரு.. உங்க கஷ்டத்தை பொரிச்சவரு.. பாஜ பிரசாரத்தில் நமீதா ராக்ஸ்

வடசென்னை நாடாளுமன்ற பாஜ வேட்பாளர் பால் கனகராஜை ஆதரித்து திருவொற்றியூர் பெரியார் நகரில் நடிகை நமீதா திறந்த ஜீப்பில் நேற்று பிரசாரம் மேற்கொண்டார். நமீதா வந்ததும் பாஜ மற்றும் அவர்களது கூட்டணி கட்சிக்காரர்களைத் தவிர பொதுமக்கள் யாரும் அங்கு வரவில்லை. திறந்த ஜீப்பில் போகும்போது கூட நடிகை நமீதாவை யாரும் கண்டு கொள்ளவில்லை. தமிழ் சரியாக பேச வராததால் ஒருவர் கையில் நோட்டு புத்தகத்தை வைத்துக்கொண்டு, அதில் அவருக்குத் தெரிந்த மொழியில் எழுதி வைத்துக் காட்ட, அதனைப் பார்த்து நமீதா பேசினார்.

‘‘எல்லோருக்கும் வணக்கம், நம்முடைய பாஜப்பா மீன் அவர்கள் சார்பில் ரூ.39 ஆயிரம் கோடி கொடுத்து இருக்காங்க பாஜக்க, எல்லோருக்கும் நிறைய வீடு கட்டி கொடுத்து இருக்காங்க, எல்லோருக்கும் பாத்ரூம் வசதி கொடுத்து இருக்காங்க. இப்ப நம்ம வேட்பாளர் பால் கனக்ராஜ் பற்றி பேசனும்னா நல்லா படைச்சவரு, உங்களுக்கு எல்லாம் நல்ல தெரிந்தவரு, சட்டம் படைச்சவரு. உங்கள் கஷ்டத்தை நல்ல பொரிச்சிவாரு உங்களுக்காக ஒருவர் உங்களில் ஒருவர், பார் கவுன்சில் அசோசியேசன்ல ஒருவாட்டுக் கிடையாது, 4 தடவை தலைவராக இருந்திருக்காரு, நிறைய இலை மக்களுக்காக உதவி செஞ்சிருக்காரு, நிங்க தைரியமா நம்பி பால் கனகராஜ்க்கு தாமரைக்கு ஓட்டுப் போடுங்க, உங்களுக்கெல்லாம் எப்போம் 24 மணி நேரம் பாதுகாப்பாக இருப்பாரு, தாமரை மலரூம் தமிழ்நாடு வளரூம். கண்டிப்பா யாரும் யாரும், நம்ம தமிழ்நாடு மக்களுக்காக நல்லா வேலை பண்ணப்போரா அங்கே முழுசா இருக்கப்போரே, அதை கெளவே கேட்க தேவையில்லை. பிஜேபி கட்சிக்காக நான் ஹெல்ப் பண்ணப்போரேன் வாழ்நாள் சிம்பிள் நன்றி’’ - இப்படி நமீதா பேசியதை கேட்ட அங்கிருந்த ஐந்தாறு பேரும் அலறிக்கொண்டு ஓடினர்.