அண்ணாநகர்: கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு முழுவதும் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. தற்போது மழை பெய்வதால் வியாபாரிகளும், பொதுமக்களும் குறைந்தளவே வருகின்றனர்.
இதன்காரணமாக காய்கறிகள் விலை குறைந்தது. குறிப்பாக, ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.18க்கும், சின்ன வெங்காயம் ரூ.25க்கும், தக்காளி ரூ.20க்கும், உருளைக்கிழங்கு ரூ.17க்கும், கேரட் ரூ.30க்கும், பீன்ஸ் ரூ.25க்கும், பீட்ரூட், முள்ளங்கி ஆகியவை ரூ.15க்கும் நேற்று விற்பனை செய்யப்பட்டது.
இதேபோல், சவ்சவ், வெண்டைக்காய், புடலங்காய், சுரக்காய் ரூ.10க்கும், முட்டைகோஸ் ரூ.5க்கும், கத்தரிக்காய் ரூ.15க்கும், காராமணி, பாவற்காய் மற்றும் காலிபிளவர் ரூ.20க்கும், சேனைக்கிழங்கு ரூ.40க்கும், முருங்கைக்காய் ரூ.30க்கும், நூக்கல், கொந்தவரங்காய் ரூ.25க்கும், கோவைக்காய் ரூ.12க்கும் விற்பனை செய்யப்பட்டது.