புதுடெல்லி: அடுத்த ஆண்டு திரைக்கு வரவுள்ள ‘‘ப்ரோ கோட்” எனும் திரைப்படத்தை இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கி வரும் நிலையில் ரவி மோகன் ஸ்டுடியோஸ்’ இந்த திரைப்படத்தை தயாரித்து வருகிறது. இதில் நடிகர் ரவி மோகன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகள் நடித்துள்ள நிலையில் திரைப்படத்தின் பெயர் தங்கள் நிறுவனத்தின் வர்த்தக பெயர் எனக்கூறி டெல்லியை சேர்ந்த மதுபான நிறுவனம் ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதை எதிர்த்து மதுபான நிறுவனம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவானது நீதிபதி தேஜஸ் கரியா தலைமையில் முன்னதாக விசாரணைக்கு வந்தபோது ஒரே மாதிரியான வணிக முத்திரையை பயன்படுத்துவது விதி மீறல் ஆகும். மேலும் இது நுகர்வோர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது. எனவே குறிப்பிட்ட வழக்கு முடிவடையும் வரை திரைப்படத்தின் விளம்பரங்களுக்கு அல்லது திரைப்படத்தின் வெளியிட்டு இருக்கும் ப்ரோ கோட் தலைப்பை பயன்படுத்த தடை விதிப்பதாக தெரிவித்திருந்தது. ஆனால் டெல்லி உயர்நீதிமன்றத்தின் மேற்கண்ட தடை உத்தரவை மீறி படத்தின் விளம்பர வேலைகளில் ரவி மோகன் ப்ரோ கோட் எனும் பெயரை தொடர்ந்து பயன்படுத்துவதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

