புதுடெல்லி: பீகார் தேர்தல் தோல்விக்கு பிறகு நேற்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, காங்கிரஸ் கட்சியின் ஓபிசி பிரிவு தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். ஓபிசி பிரிவு தலைவரான ஜெய்ஹிந்த் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் சச்சின் பைலட், அஜய் குமார் லல்லு மற்றும் விஜய் நம்தேவ்ராவ் வடெட்டிவார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சுமார் 1 மணி நேரம் நடந்த ஆலோசனை கூட்டத்தில் சமூகத்தின் அதிகாரமளிப்பது தொடர்பான முக்கிய பிரச்னைகள் குறித்து ஆலோசனை நடந்தது. மேலும் 50 சதவீத இடஒதுக்கீடு வரம்பை நீக்க வேண்டிய அவசியம் மற்றும் சரியான சாதி மக்கள் தொகை கணக்கெடுப்பு போன்ற ஓபிசிகள் தொடர்பான முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
+
Advertisement



