சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிவிப்பு: சிறப்பு தீவிர திருத்தத்தை கண்காணிக்கவும், பிஎல்ஏ 2 நியமனங்களை மாவட்ட காங்கிரஸ் தலைவர்களுடன் இணைந்து தீவிரப்படுத்தவும் மாவட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். சென்னை மாவட்டத்துக்கு, அசன் மவுலான எம்எல்ஏ, இமயா கக்கன், லட்சுமி ராமச்சந்திரன், காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு தாம்பரம் நாராயணன், வழக்கறிஞர் மதுமதி, எஸ்.டி.நெடுஞ்செழியன், செங்கல்பட்டு மாவட்டத்துக்கு இல.பாஸ்கரன், டாக்டர் சுமதி அன்பரசு, பூவை ஜேம்ஸ், திருவள்ளூர் மாவட்டத்துக்கு சசிகாந்த் செந்தில் எம்பி, துரை சந்திரசேகர் எம்எல்ஏ, தூத்துக்குடி மாவட்டத்துக்கு ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ, முன்னாள் எம்பி எஸ்.எஸ்.ராமசுப்பு, ஏபிசிவி சண்முகம், திருநெல்வேலி மாவட்டத்துக்கு ராபர்ட் புரூஸ் எம்பி, ரூபி மனோகரன் எம்எல்ஏ, ரமேஷ் குமார், ஆலங்குளம் செல்வராஜ், கன்னியாகுமரி மாவட்டத்துக்கு விஜய் வசந்த் எம்பி, எம்எல்ஏக்கள் ராஜேஷ் குமார், பிரின்ஸ், தாரகை கத்பர்ட் மற்றும் வி.பி.துரை என மொத்தம் உள்ள 38 மாவட்டங்களுக்கும் மாவட்ட பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
+
Advertisement

