புதுடெல்லி: மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் ஒன்றிய உள்துறை இணையமைச்சரும், முன்னாள் ஏஐசிசி பொதுச்செயலாளருமான ஷகீல் அகமது நேற்று காங்கிரஸ் கட்சியில் இருந்து ராஜினாமா செய்தார். பீகார் மாநிலத்தை சேர்ந்த அவருக்கும், பீகார் மாநில காங்கிரஸ் தலைவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து அவர் தனது ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அனுப்பினார். காங்கிரஸ் சித்தாந்தத்தில் தொடர்ந்து நம்பிக்கை வைத்திருப்பதாகவும், எந்தக் கட்சியிலும் சேரப் போவதில்லை என்றும் அவர் கூறினார்.
+
Advertisement
