புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் படை வீரர் துறை தலைவர் ஓய்வு பெற்ற கர்னல் ரோஹித் சவுத்ரி கூறுகையில் பிரதமர் மோடி அரசு ஓய்வு பெற்ற அக்னி வீரர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று உறுதியளித்து இருந்தது. ஆனால் இப்போது உள்துறை அமைச்சகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில் ஓய்வு பெறும் அக்னி வீரர்கள் நாட்டின் முதல் 10 தனியார் பாதுகாப்பு நிறுவனங்களில் செக்யூரிட்டிகளாக இடம்பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அக்னி வீரர்களுக்கு ஓய்வூதியம் பெறக்கூடிய வேலைகளை வழங்கி அவர்களை மத்திய மற்றும் மாநில வேலைகளில் சேர்ப்பதாக வாக்குறுதி அளிக்கப்பட்டபோது இன்று அவர்கள் ஏன் தனியார் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அனுப்பப்படுகிறார்கள்.
அக்னி வீரர்களுக்ளு ஓய்வூதியம்பெறக்கூடிய வேலைகள் எப்போது வழங்கப்படும். அக்னி வீரர்களை ஒரு தனியார் ராணுவமாக மாற்றி நாட்டிலும், வெளிநாட்டிலும் போர்களில் தள்ளுவதை அனுமதிக்க முடியாது. எங்களது ஜெய் ஜவான் பிரச்சாரம் தொடர்கிறது. மேலும் வீரர்களின் நலனுக்கான நாங்கள் தொடர்ந்து கேள்விகளை எழுப்புவோம். அக்னி வீரர் திட்டம் நாட்டின் பாதுகாப்புக்கும் இளைஞர்களுக்கும் ஆபத்தானது என்பதில் நாங்கள் அனைவரும் உறுதியாக இருக்கிறோம். மேலும் அது முடிவுக்கு வர வேண்டும்” என்றார்.
