சென்னை: ஜென்டில்மேன் டிரைவர் ஆஃப் தி இயர் 2025 விருது பெற்ற நடிகர் அஜித்துக்கு வாழ்த்து என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் தெரிவித்ததாவது; பிரெஞ்சு தொழிலதிபரும், கார் பந்தய வீரருமான மறைந்த பிலிப் சாரியோல் (Philippe Charriol) நினைவாக இத்தாலியின் வெனிஸ் நகரில் வழங்கப்படும் 'ஜென்டில்மேன் டிரைவர் ஆஃப் தி இயர் 2025' (Gentleman Driver of the Year 2025) விருதை பெற்றிருக்கும் நடிகர் அஜித் குமார் அவர்களுக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.
தன்னம்பிக்கையும், கட்டுப்பாடும் கடின உழைப்பும்தான் வெற்றியின் அடித்தளம் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளீர்கள். சினிமாவிலும், மோட்டார் விளையாட்டுகளிலும் தமிழர்களின் திறனையும் உயரத்தையும் உலகுக்கு அறிமுகப்படுத்தி வருவது பெருமை. இந்த சாதனை மேலும் பல இளைஞர்களுக்கு ஊக்கமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அஜித் அவர்களின் எதிர்கால முயற்சிகள் அனைத்திலும் மேலும் பல வெற்றிகள் கிட்ட என் மனமார்ந்த வாழ்த்துக்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



