காங்கோ நாட்டில் உள்ள செம்பு சுரங்கத்தின் பாலம் திடீரென இடிந்து விழுந்ததில் 32 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!!
கின்ஷாஷா: ஆப்பிரிக்க நாடான காங்கோ நாட்டில் உள்ள செம்பு சுரங்கத்தின் பாலம் திடீரென இடிந்து விழுந்ததில் 32 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோவில், கலண்டோ செப்பு சுரங்கம் ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த சுரங்கத்தில் தொழிலாளர்கள் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென சுரங்கத்தில் பாலம் இடிந்து விழுந்ததில் தொழிலாளர்கள் பலர் இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர், மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்தில் தொழிலாளர்கள் 32 பேர் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.பாலம் திடீரென இடிந்த போது பீதியடைந்த சுரங்க தொழிலாளர்கள் ஓடியபோது ஒருவர் மீது ஒருவர் விழுந்ததால் இறப்பு எண்னிக்கை அதிகரித்ததாக கூறப்படுகிறது. 32 பேர் இறந்ததாக கூறப்பட்டாலும் உண்மையான இறப்பு எண்னிக்கை 40-யை தாண்டக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. லுவாலாபா மாகாண உள்துறை அமைச்சர் ராய் கௌம்பா உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.


