புதுடெல்லி: சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில்,‘‘கட்டாய கல்வி உரிமை சட்டத்தை நிறைவேற்றுவது ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் பொது பொறுப்பாகும் ஒன்றிய அரசிடமிருந்து நிதி கிடைக்கவில்லை என்பதை காரணமாக கூறாமல், சட்டத்தின் அடிப்படையில், தனியார் பள்ளிகளுக்கான நிதியை மாநில அரசே வழங்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் கட்டாயக் கல்வி உரிமை சட்டம் தொடர்பான விவகாரத்தில் உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில்,‘‘ஒன்றிய அரசு போதிய நிதியை விடுவிக்கமால் இருந்து வருவதால், மாநில அரசு எப்படி கட்டாயக் கல்வி உரிமை சட்டம் தொடர்பான திட்டத்தை செயல்படுத்த முடியும்’’ என்று தெரிவித்துள்ளது.