சென்னை: முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித்தேர்வை தள்ளிவைக்க உத்தரவிட முடியாது என ஐகோர்ட் தெரிவித்தது. புதிய பாடத்திட்ட அடிப்படையில் தேர்வுக்கு தயாராக முடியவில்லை என கூறி விண்ணப்பதாரர்கள் வழக்கு பதிவு தொடர்ந்தனர். தேர்வை தள்ளிவைக்கக் கோரி தாக்கல் செய்த வழக்குகளை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். விண்ணப்பித்த 2 லட்சம் பேரும் தேர்வெழுத அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்துவிட்டன என அரசுத் தரப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசுத் தரப்பு வாதத்தை பதிவு செய்த சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு தள்ளுபடி செய்தது.
+
Advertisement