சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் வெளியிட்ட அறிக்கை: பாலஸ்தீன மக்கள் தங்கள் தாயக உரிமைக்காக பல பத்தாண்டுகளாக போராடி வருகின்றனர். இச்சூழலில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் தமிழ்நாடு மாநில குழுவின் முன்னெடுப்பில் தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் ஒருங்கிணைந்து, தலைநகர் சென்னையில் இஸ்ரேலை கண்டித்துள்ளதும், இந்த நிகழ்வில் கலந்துகொண்ட தமிழ்நாடு முதல்வர், சட்டமன்றப் பேரவையில் இஸ்ரேலை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்படும் என அறிவித்திருப்பதும் உலகளவிலான விடுதலை இயக்கங்களுக்கு ஊக்கம் அளிக்கும் செய்தியாகும்.
முதலமைச்சரின் முன் முயற்சிகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பதுடன், இஸ்ரேல் தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும். அதற்கான முயற்சிகளை இந்திய ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.