திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகா மருதுவாஞ்சேரி கிராமத்தில் வசித்தவர் அன்பழகன் (61). மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குடவாசல் வடக்கு ஒன்றிய செயலாளர். இவர் நேற்று மாலை மதுவாஞ்சேரி கிராமத்தில் உள்ள தனது வயலில் சம்பா சாகுபடி பணிக்காக நேரடி நெல் விதைப்பில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது மழை தூர துவங்கியுள்ளது. சிறிது நேரத்தில் மின்னல் தாக்கி அன்பழகன் மயங்கி வயலில் விழுந்தார். தொழிலாளர்கள், அவரை மீட்டு நன்னிலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே அன்பழகன் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.