Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இந்தியக் கம்யூ. கட்சி மாநிலச் செயலாளராகத் தேர்வாகி உள்ள மு.வீரபாண்டியனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!!

சென்னை: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளராகத் தேர்வாகி உள்ள மு.வீரபாண்டியனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியதாவது;

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து:

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள மு.வீரபாண்டியன் அவர்களுக்கு வாழ்த்துகள்!

இயக்கத்தை இதுநாள் வரையில் சிறப்பாக வழிநடத்தி, தோழமை பாராட்டிய தோழர் முத்தரசன் அவர்களுக்கு நன்றி!

ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காகப் பாடுபடும் இடதுசாரி அரசியலில் இணைந்து பயணித்து, வெற்றி காண்போம்!. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வைகோ வாழ்த்து:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளராக தோழர் மு.வீரபாண்டியன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தி எல்லையற்ற மகிழ்ச்சியினை எனக்குத் தருகிறது.

தோழர் மு.வீரபாண்டியன் அவர்கள் மார்க்க்சிய, லெனினிய கொள்கைகளையும், பொதுவுடமை சித்தாந்தத்தையும் நேர்த்தியாகக் கற்றுத் தேர்ந்து அவற்றுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட செங்கொடி வீரர் ஆவார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய அனைத்துப் போராட்டங்களிலும் கலந்துகொண்டு மிகச் சிறந்த போராளியாக தன் இலட்சியப் பயணத்தை தொடர்ந்து வரும் தோழர் மு.வீரபாண்டியன் அவர்கள் மிகச் சிறந்த பேச்சாளராகவும், எழுத்தாளராகவும் திகழ்ந்து வருகிறார். இதுகாறும் பொறுப்பில் இருந்த தோழர் முத்தரசன் அவர்களைப் போலவே சக தோழர்களிடமும், அனைத்துக் கட்சியினரிடமும் மிகுந்த நேசத்தோடு மதித்துப் பழகக் கூடிய பண்பாளர் தோழர் மு.வீரபாண்டியன் ஆவார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வலுவையும், மதிப்பையும் ஏற்படுத்திக் கொடுக்கக் கூடிய வகையில் அவரது பணி சிறக்கவும், அவர் எடுக்கின்ற முயற்சிகளில் வெற்றி பெறவும் மறுமலர்ச்சி தி.மு.கழகம் சார்பில் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.