அகமதாபாத்: காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய வீராங்கனை மீராபாய் சானு, தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். குஜராத்தின் அகமதாபாத் நகரில், காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. இப்போட்டிகளில், 48 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்ற இந்தியாவை சேர்ந்த வீராங்கனை மீராபாய் சானு (31), ஸ்நாட்ச், கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவுகளில் ஒட்டுமொத்தமாக, 193 கிலோ பளுதுாக்கி தங்கப்பதக்கம் வென்றார். இவர், கடந்த 2020ல், டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். கடந்தாண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் 4ம் இடம் பிடித்திருந்தார். நேற்றைய போட்டியில், மலேசியா வீராங்கனை ஐரீன் ஹென்றி, 161 கிலோ பளு தூக்கி வௌ்ளிப் பதக்கமும், வேல்ஸ் வீராங்கனை நிகோல் ராபர்ட்ஸ், 150 கிலோ பளு தூக்கி வெண்கலமும் வென்றனர்.
+
Advertisement