திருவனந்தபுரம்: மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் காமன்வெல்த் செஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளுக்கான செஸ் போட்டியில் கேரளாவின் திருவனந்தபுரத்தை சேர்ந்த திவி பிஜேஷ் (10) பங்கேற்றார். போட்டிகளின் 9 சுற்றுகள் முடிவில் அவர், 8.5 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து அசத்தினார். இதன் மூலம் யு-12 பிரிவில் திவி பிஜேஷ் சாம்பியன் பட்டத்தை வென்றார். 10 வயதே ஆனபோதும், 12 வயதுக்கு உட்பட்ட பிரிவில் ஆட விரும்புவதாக தெரிவித்த திவி, அந்த போட்டியில் வெற்றியும் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
+
Advertisement


