Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.10.50 குறைப்பு: சென்னையில் ரூ.1,739.50 என நிர்ணயம்

சேலம்: வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.10.50 குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் ரூ.1,739.50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையை, இந்திய எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயித்து வருகிறது. இதில், காஸ் சிலிண்டர் விலை மாதந்தோறும் 1ம் தேதி மாற்றியமைக்கப்படுகிறது.

அதன்படி நேற்று அதிகாலை வெளியான நடப்பு மாதத்திற்கான (டிசம்பர்) விலை பட்டியலில் 14.2 கிலோ வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தாமல், அதே விலையில் நீடிக்க செய்துள்ளனர்.

அதேவேளையில், 19 கிலோ எடை கொண்ட வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.10 முதல் ரூ.12 வரை குறைத்துள்ளனர். சென்னையில் கடந்த மாதம் வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.1,750 என இருந்தநிலையில், ரூ.10.50 குறைந்து ரூ.1,739.50 ஆகவும், சேலத்தில் ரூ.1,699ல் இருந்து ரூ.10 குறைந்து ரூ.1,689 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.