Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

புற்றுநோய் பாதிப்புடன் போராடிய பிரபல காமெடி நடிகர் மரணம்: திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி

லண்டன்: பிபிசியின் பிரபல தொலைக்காட்சி தொடரில் நடித்த நடிகர் பேட்ரிக் முர்ரே புற்றுநோயால் காலமானார். பிபிசியின் புகழ்பெற்ற ‘ஒன்லி ஃபூல்ஸ் அண்ட் ஹார்சஸ்’ என்ற நகைச்சுவைத் தொலைக்காட்சி தொடரில் மிக்கி பியர்ஸ் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் பேட்ரிக் முர்ரே (68). இவர் 1983 முதல் 2003 வரை 20 அத்தியாயங்களில் நடித்து தனது நகைச்சுவை நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர். மேலும், 1979ல் வெளியான ‘குவாட்ரோபீனியா’, ‘ஸ்கம்’ போன்ற திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். நடிப்பிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, தனது குடும்பத்தை தாய்லாந்திலிருந்து இங்கிலாந்துக்கு அழைத்து வருவதற்காக, கென்ட் பகுதியில் வாடகை கார் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில், புற்றுநோயுடன் நீண்ட காலமாகப் போராடி வந்த பேட்ரிக் முர்ரே, கடந்த செப்டம்பர் 29ம் தேதி தூக்கத்திலேயே உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2021ம் ஆண்டு அவருக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. 2022ல் அவர் நோயிலிருந்து முழுமையாக மீண்டுவிட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஏப்ரல் 2023ல் புற்றுநோய் மீண்டும் பரவியது. அவருக்கு அனோங் என்ற மனைவியும், ஜோசி என்ற மகளும் உள்ளனர். அவரது மறைவுக்கு சக நடிகர்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் தங்களது இரங்கலைத் தெரிவித்து, அவரது நகைச்சுவை உணர்வையும், அன்பான குணத்தையும் நினைவுகூர்ந்து வருகின்றனர்.