Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

காம் செயலி!

அலுவலகம், வீட்டுப் பராமாரிப்பு, குழந்தைகள், குடும்பம் என மல்டி டாஸ்கிங் செய்யும் பெண்கள் அதிகரித்து விட்டனர். இதனால் உடலும் மனமும் எந்நேரமும் பரபரப்புடன் இயங்குவதால் சுலபமாக மன அழுத்தம், சோர்வு உண்டாகி, ஆரோக்கியத்தில் பிரச்னை உண்டாகும். இதனைத் தடுக்கத்தான் உதவுகிறது காம் (Calm) செயலி. பெண்கள் மனஅழுத்தத்தை குறைத்து மன அமைதியை பெற உதவுகிறது. இதில் தினசரி தியானம், மூச்சுப்பயிற்சி, தூக்கத்துக்கானக் கதைகள், இயற்கை ஒலிகள் போன்றவை உள்ளன. “Daily Calm” என்ற பகுதி ஒவ்வொரு நாளும் சில நிமிட தியானத்துக்கு வழிகாட்டுகிறது. “Sleep Stories” மென்மையான குரல், இசையுடன் தூக்கத்தை எளிதாக்குகிறது. “Breath Bubble” மூலம் சரியான மூச்சுப்பயிற்சி கற்றுக்கொள்ளலாம். வேலைப்பளுவில் இருக்கும் பெண்களுக்கு சோர்வை குறைத்து புத்துணர்ச்சி தரும். குழந்தைகளுக்கான தியானக் கதைகளும் காம் செயலியில் உள்ளன. மன அமைதி, நிம்மதி, நல்ல தூக்கம் அனைத்தும் இந்த செயலியில் கிடைக்கும்.