Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

காலணி வடிவமைப்பு மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை

பணியிடங்கள் விவரம்:

1. Junior Faculty/Faculty: 1 இடம். சம்பளம்: ரூ.45,000 (Junior Faculty), Rs.65,000 (Faculty).

தகுதி: பேஷன் டிசைன்/அப்பரல் டிசைன்/ லைப் ஸ்டைல் அக்சசரி டிசைன்/ நிட்வேர் டிசைன்/லெதர் டிசைன்/டெக்ஸ்டைல் டிசைன்/ பேஷன் மேனேஜ்மென்ட் பிரிவில் 55% மதிப்பெண்களுடன் முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. Junior Faculty/Faculty: 1 இடம்.

தகுதி: கார்மென்ட் மேனுபேக்சரிங் டெக்னாலஜி/டெக்ஸ்டைல் கிளாத்திங்/டெக்ஸ்டைல் இன்ஜினியரிங்/டெக்ஸ்டைல் டெக்னாலஜி/பேப்ரிக் மற்றும் அப்பரல் சயின்சில் 55% மதிப்பெண்களுடன் முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

3. Junior Faculty: 1 இடம்.

தகுதி: ரீ டெய்ல்/டிசைன்/பேஷன் கம்யூனிகேசன்/ பேஷன் டெக்னாலஜி பிரிவில் 55% மதிப்பெண்களுடன் முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.45,000 (Junior Faculty), ரூ.65,000 (Faculty).

வயது வரம்பு: Faculty பணிக்கு 18லிருந்து 40க்குள் இருக்க வேண்டும். Junior Faculty பணிக்கு 18 லிருந்து 35க்குள் இருக்க வேண்டும். Faculty பணிக்கு 7 வருட பணி அனுபவமும். Junior Faculty பணிக்கு 3 வருட பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.

4. Junior Lab Assistant: 1 இடம்.

சம்பளம்: ரூ.22,000.

வயது வரம்பு: 18 லிருந்து 35க்குள்.

தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.

5. Lab Assistant: 1 இடம்,

சம்பளம்: ரூ.25,000.

வயது வரம்பு: 18 லிருந்து 40க்குள்.

தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.www.fddiindia.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.07.2025.