கொலம்பியா: கொலம்பியாவில் வெடிகுண்டுகள் நிரப்பிய லாரியை மோதி நடத்திய தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர். மேற்கு கொலம்பியாவில் உள்ள காலியில் உள்ள ஒரு விமானப்படை தளத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 5 பேர் உயிரிழந்த நிலையில் 36 பேர் படுகாயமடைந்தனர். லாரி வெடிப்பதற்கு முன்பு, வாகனத்திலிருந்து தளத்தை நோக்கி இரண்டு வெடிபொருட்கள் ஏவப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாட்டின் மூன்றாவது அதிக மக்கள் தொகை கொண்ட நகரமான காலியில் மேயர் அலெஜான்ட்ரோ எடர் இராணுவச் சட்டத்தை அமல்படுத்த உத்தரவிட்டும். பெரிய லாரிகள் நகரத்திற்குள் நுழைவதற்கு தற்காலிகத் தடை விதிப்பதாகவும், 10,000 அமெரிக்க டாலர் வெகுமதிக்காக இந்த சம்பவம் குறித்த தகவல்களைப் பொதுமக்களிடம் தெரிவிக்குமாறும் அவர் அழைப்பு விடுத்தார்.