சென்னை: ஐரோப்பாவில் தமிழியல் ஆய்வுக்கான மையமான கொலோன் பல்கலை. தமிழ்த்துறை நூலகத்தை பார்வையிட்டேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் பதிவில் கூறியதாவது; 40,000 அரிய தமிழ் நூல்களைக் கொண்ட கொலோன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நூலகத்தை பார்வையிட்டேன். கொலோன் தமிழ்த்துறை மூடப்படுவதை தடுக்க திமுக ஆட்சிக்கு வந்ததுமே ரூ.1.25 கோடி வழங்கினோம். சென்னை, மதுரையை தொடர்ந்து கோவை, திருச்சியில் நூலகம் அமைக்கும் நமது முயற்சிக்கு ஊக்கமாக கொலோன் நூலகம் அமைந்துள்ளது. கொலோன் பல்கலை.க்கு சென்றது அனைவருக்குமான அறிவு மையமாக நூலகங்களை அமைத்து வரும் நமது முயற்சிகளுக்கு நல்லூக்கமாக அமைந்தது என முதல்வர் தெரிவித்தார்.
+
Advertisement