Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கல்லூரி பாதையின் (College lane) பெயர், ஜெய்சங்கர் சாலை என்று மாற்றம் செய்து அரசாணை வெளியீடு

சென்னை: கல்லூரி பாதையின் (College lane) பெயர், ஜெய்சங்கர் சாலை என்று மாற்றம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரி பாதையின் பெயரை ஜெய்சங்கர் சாலை என்று பெயர் மாற்ற செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கல்லூரி பாதைக்கு ஜெய்சங்கர் பெயர் சூட்ட வேண்டும் என அவரது மகன் விஜயசங்கர் முதல்வரிடம் கோரிக்கை வைத்திருந்தார். ஜெய்சங்கர் சாலை என்று மாற்றம் செய்ய சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதுகுறித்து மேலும் வெளியான அறிக்கையில்; தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநகராட்சிகள் (பெருநகர சென்னை மாநகராட்சி உட்பட), நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கு சொந்தமான இடங்களில் உள்ள சாலைகள், கட்டடங்கள். பூங்காக்கள் மற்றும் விளையாட்டு திடல்கள் போன்றவற்றிற்கு பெயர் வைப்பது. மாற்றுவது தொடர்பான முன்மொழிவுகளை ஆணையர், பெருநகர சென்னை மாநகராட்சி, நகராட்சி நிர்வாக இயக்குநர் /பேரூராட்சிகளின் ஆணையாளர் ஆகியோர் வழியாக அரசிற்கு அனுப்ப வேண்டும் எனவும், அரசின் அனுமதி பெற்ற பின்னரே, நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளின் சொத்துகளுக்கு பெயரிடுவது மற்றும் பெயர் மாற்றம் குறித்த தீர்மானங்கள் சம்பந்தப்பட்ட மன்றங்கள்/மாமன்றங்களில் ஒப்புதலுக்கு வைக்கப்பட வேண்டும் என அனைத்து மாநகராட்சிகள் (பெருநகர சென்னை மாநகராட்சி உட்பட). நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கு அறிவுறுத்தி அரசு ஆணையிட்டுள்ளது.

2. மேலே இரண்டாவதாக படிக்கப்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையரின் கடிதத்தில், பின்வருமாறு தெரிவித்துள்ளார்:

(i) பேராசிரியர் விஜய் சங்கர், சங்கர் ஐ கேர் , தமிழ்நாடு முதலமைச்சரிடம் அளித்துள்ள மனுவில், மறைந்த ஜெய்சங்கர் 35 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய நடிகராகவும், பிரபல நடிகராகவும் இருந்தார் என்றும், மக்கள் கலைஞர் என்றும். தமிழ் சினிமாவின் ஜேம்ஸ்பாண்ட் என்றும் அழைக்கப்பட்டவர் என்றும், முன்னாள் முதலமைச்சர் டாக்டர். கலைஞருடன் நெருங்கிய தொடர்புடையவர் என்றும், டாக்டர் கலைஞர் அவர்களால் கலைமாமணி விருது வழங்கப்பட்டது என்றும், பல்வேறு தொண்டு நடவடிக்கைகளில் ஈடுபட்ட அவர். தமிழ் திரைப்படத் துறையின் வளர்ச்சிக்கு உதவினார் என்றும், 1964 முதல் 2000 வரை அவர் இறக்கும் வரை கல்லூரிப் பாதையில் (College lane) வசித்து வந்தார் என்றும், அவரது நினைவாக கல்லூரிப் பாதையை (College lane) ஜெய்சங்கர் சாலை என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார்.

(II) மேலும் பேராசிரியர் விஜய் சங்கர். சங்கர் ஐ கேர் 31.07.2025 அன்று பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் அவர்களின் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் "ஜெய்சங்கர் சாலை" (JAISHANKAR ROAD) என பெயர் மாற்றம் செய்ய வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார்.

3. மேற்கண்ட சூழ்நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்-09, கோட்டம்-111, நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள கல்லூரி பாதையை (College lane) "ஜெய்சங்கர் சாலை" (JAISHANKAR ROAD) என பெயர் மாற்றம் செய்வதற்கு 30.07.2025 அன்று நடைபெற்ற பெருநகர மாநகராட்சியின் மாமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி (தீர்மான எண்.913/2025) அரசாணை வழங்குமாறு பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் அரசை கோரியுள்ளார். சென்னை

4. அரசு, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையரின் செயற்குறிப்பினை கவனமான பரிசீலனைக்கு பின்னர், சிறப்பினமாக கருதி, அதனை ஏற்று, பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்-09. கோட்டம்-111, நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள கல்லூரி பாதையை (College lane) "ஜெய்சங்கர் சாலை" (JAISHANKAR ROAD) என பெயர் மாற்றம் செய்வதற்கு பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையருக்கு அனுமதி வழங்கி ஆணையிடுகிறது.