ஊட்டி: தமிழ்நாட்டில் முதல் முறையாக ஊட்டி மரவியல் பூங்காவில் ரூ.40 லட்சம் மதிப்பில் நாய்களுக்கான பூங்கா அமைக்கும் பணியை கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழ்நாட்டில் முதல் முறையாக நீலகிரி மாவட்டம் ஊட்டி மரவியல் பூங்காவில் ரூ.40 லட்சம் மதிப்பில் நாய்களுக்கான (பெட் பார்க்) பூங்கா அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இங்கு நாய்களுக்கான சிறப்பு உபகரணங்கள், புற்களால் அமைக்கப்பட்ட சுரங்கபாதை, காய்ந்த இறகு மூலம் செய்யப்பட்ட குளம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் பூங்கா அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பூங்காவை மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு ஆய்வு செய்தார். விரைவில் பூங்கா திறக்கும் வகையில் அனைத்து பணிகளும் மேற்கொள்ளுமாறும், தடுப்பு வேலி மற்றும் அடையாள பலகை குறித்து சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
