Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தமிழ்நாட்டில் 23ம் தேதி வரை குளிர் நடுங்க வைக்கும்

சென்னை: இலங்கையின் தெற்குப்பகுதியில் நிலை கொண்டு இருக்கும் காற்று சுழற்சி மற்றும் தமிழகத்தின் மேற்குப் பகுதியில் நிலை கொண்டுள்ள சுழற்சியின் காரணமாக வடக்குப்பகுதியில் இருந்து குளிர் காற்று ஈர்க்கப்படுகிறது. அதன் காரணமாக தமிழகத்தில் 23ம் தேதி வரை கடும் குளிர் நீடிக்கும் என்று வானிலை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இலங்கையின் தெற்கு மற்றும் தென்கிழக்கு பகுதியில் ஒரு காற்று சுழற்சி நிலை கொண்டுள்ளது. அதன் காரணமாக தமிழகத்தில் கடும் குளிர் நீடித்து வருகிறது.

தற்போது கடும் குளிராக இருந்து பின்னர் 23ம் தேதி விலகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஜனவரி, பிப்ரவரி மாதங்களில்தான் கடும் பனிப்பொழிவு மற்றும் கடும் குளிர் இருப்பது வழக்கம். சில நேரங்களில் குளிர் குறைவதும் உண்டு. இலங்கை தெற்கில் நிலை கொண்டுள்ள காற்று சுழற்சி காரணமாக வடக்குப் பகுதியில் இருந்து காற்று தெற்குப் பகுதி நோக்கி ஈர்க்கப்படுவதால், தமிழகம் ஊடாக காற்று பயணிக்கிறது. அதனால் தமிழக மற்றும் தமிழக கடலோரப் பகுதியில் கடும் குளிர்காற்று வீசிவருவதால், இரவு நேரங்களில் கடும் குளிர் இருக்கும். நீராவிக் காற்றைவிட குளிர் அதிகம் கொண்ட காற்று கடல் பரப்பில் நீடித்து வருவதால் கடும் குளிர் நிலவுகிறது.

17ம் தேதி கிழக்கு காற்றின் மூலம் குளிர் அலை வீசும். இமய மலைப்பகுதியில் இருந்து தெற்கு நோக்கி குளிர் காற்று வீசும். சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தேனி, விருதுநகர், திருச்சி, ஈரோடு, நீலகிரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் 16, 17, 18 ம் தேதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது. 19ம் தேதி முதல் 24ம் தேதி வரையில் மீண்டும் ஒரு காற்று சுழற்சி உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுவதால், மீண்டும் குளிர் காற்று வீசத் தொடங்கும். அதுவரையில் இலங்கை காற்று சுழற்சியானது, குளிர் காற்றை கட்டுப்படுத்தி வைத்திருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரத்தில், தமிழகத்தின் மேற்குப் பகுதியில் நிலை கொண்டுள்ள சுழற்சியின் காரணமாகவும் குளிர் காற்று வீசும். 19ம் தேதி முதல் 23ம் தேதி வரை குளிரை ஈர்க்கும் சுழற்சியும் தென் அரைக்கோளத்தில் உருவாகும் என்பதால் அப்போதும் குளிர் காற்று கடுமையாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 23ம் தேதியுடன் குளிரை ஈர்க்கும் அமைப்புகள் அனைத்தும் விலகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. டிட்வா புயல் மழைக்குப் பிறகு தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் கடும் குளிர் வீசுகிறது. குறிப்பாக மாலை 6 மணிக்கு மேல் ஆரம்பிக்கும் குளிர், காலை 8 மணி வரை வீசுகிறது.

இதனால் மக்களுக்கு குளிர் காய்ச்சல், இருமல், சளி தொல்ைலயால் அவமதிக்குள்ளாகியுள்ளனர். இதற்கிடையே ஜப்பானுக்கும் அலாஸ்காவுக்கும் இடையே உருவாகும் புயல், இந்தியாவின் வடக்குப்பகுதியில் இருந்து வீசும் குளிர் காற்றை ஈர்க்கும் என்பதால், தென்னிந்தியப்பகுதியில் குளிரின் தாக்கம் குறையும். 25ம் தேதிக்கு பிறகு சுமத்ரா தீவுப்பகுதியில் வலுவான காற்று சுழற்சி உருவாகி அது வங்கக் கடல் நோக்கி வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 31ம் தேதிக்குள் தீவிரம் அடைந்து தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்யும். இந்த மழை ஜனவரி முதல் வாரம் வரை பெய்யும். அதுவரை குளிர் காற்று வீசும்.

* ஸ்வெட்டர் விற்பனை அமோகம்

சென்னை உள்பட மாநிலம் முழுவதும் குளிர் வாட்டி எடுப்பதால், மாலை 6 மணிக்கு மேல் இரு சக்கர வாகனங்களிலோ, நடந்தோ வெளியில் செல்ல முடியாத அளவுக்கு குளிர் வாட்டி எடுக்கிறது. இதனால் ஸ்வெட்டர், மப்ளர் மற்றும் காதை மட்டும் மறைக்கும் துணிகள் விற்பனை பல மடங்கு உயர்ந்துள்ளது. மக்கள் துங்கள் உடைகளுடன் கூடுதலாக ஸ்வட்டர் போடும் நிலை தற்போது உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.