கோவை: கோவைப்புதூரைச் சேர்ந்த 60 வயது மூதாட்டியிடம் ரூ.18 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. கோவையில் ஆன்லைன் முன்பதிவு பணத்தை திரும்பப் பெறும் மோசடி அதிகரித்து வருவதாக பயணிகளுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கோவை நகரில் மட்டும் 50க்கும் மேற்பட்டோர் இந்த மோசடியில் ஏமாற்றம் அடைந்துள்ளனர். முன்பதிவுகளை ரத்து செய்த பிறகு பணத்தை திரும்ப பெறுபவர்களை குறிவைத்து சைபர் கிரைம் மோசடி நடைபெற்று வருகிறது. முன்பதிவு பணத்தை திரும்பப் பெற இணையதளத்தை தேடியபோது அவருக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்க கூறி ஒரு செயலியை பதிவிறக்கம் செய்து வங்கி விவரங்களை உள்ளீட செய்து மோசடி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி முதல் ஜூலை வரை 7 மாதத்தில் சைபர் கிரைம் மோசடியில் பொதுமக்கள் ரூ.1,010 கோடியை இழந்தனர்.
+
Advertisement