கோவை: கோவை விமான நிலையத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் நிருபர்களிடம் கூறுகையில், தேர்தல் நேர்மையாக நடைபெற வேண்டும் என்கிற நோக்கத்திலேயே எஸ்ஐஆர் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கோவை மற்றும் மதுரையில் ஒன்றிய அரசு மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தும். மெட்ரோ திட்டம் குறித்த கூடுதல் தகவல்களைதான் ஒன்றிய அரசு கேட்டுள்ளது. இத்திட்டங்களை முழுமையாக ரத்து செய்யவில்லை’’ என்றார். பிரதமரை வரவேற்கும் நிகழ்ச்சியில் தமாகா கொடிகள் இல்லையே என்ற கேள்விக்கு, ‘‘கட்சியின் தலைவர் நானே நேரடியாக வந்திருக்கிறேன்’’ என்று கூறினார்.
+
Advertisement


