Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

கோவை வனப்பகுதியில் மக்னா யானை திடீர் உயிரிழப்பு

கோவை: கேரளா வனப்பகுதியில் உடல்நலக் குறைவுடன் சுற்றித்திரிந்த மக்னா யானை ஒன்று கடந்த ஒரு வாரமாக கோவை ஆனைகட்டி மாங்கரை பாலமலை வனப்பகுதியில் உலா வந்தது. இதுகுறித்து அறிந்த பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினர் மக்னா யானைக்கு அவ்வப்போது வனகால்நடை மருத்துவ குழுவினர் உதவியுடன் சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம் கோபனாரி காப்புக்காட்டு பகுதியில் உடல் தளர்ந்து யானை உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் முன்னிலையில் வெள்ளியங்காடு கால்நடை மருத்துவர்கள் உடற்கூறாய்வு செய்தனர். அப்போது ரசாயன பரிசோதனைக்காக யானையின் முக்கிய பாகங்கள் எடுக்கப்பட்டது. அதன்பின்னர் பவானி ஆற்று படுகையையொட்டி உள்ள கூடப்பட்டி வனப்பகுதியில் யானையின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.