கோவை : கோவை விமான நிலையம் பின்புறம், 3 இளைஞர்களால் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். கோவை விமான நிலையத்தின் பின்புறம் காரில் ஆண் நண்பருடன் மாணவி பேசிக் கொண்டிருந்தபோது பாலியல் வன்கொடுமை நிகழ்ந்துள்ளது.
கோவை விமான நிலையத்தில் பின்புறம் உள்ள பகுதியில் காரில் ஆண் நண்பர் உடன் கல்லூரி மாணவி ஒருவர் பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அப்பகுதிக்கு வந்த 3 நபர்கள், மாணவியுடன் பேசிக் கொண்டிருந்த இளைஞரை தாக்கிவிட்டு கல்லூரி மாணவியை தூக்கி சென்றனர்.
மர்ம நபர்கள் தாக்கியதில் பலத்த காயமடைந்த இளைஞர் அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். இளைஞரின் புகாரை அடுத்து கல்லூரி மாணவியை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
இதையடுத்து அதிகாலை 4 மணியளவில் போலீசார், கல்லூரி மாணவியை நிர்வாணமாக மீட்டுள்ளனர். கல்லூரி மாணவியை தூக்கிச் சென்ற 3 மர்ம நபர்கள் மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பி ஓடியுள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
