கோவை: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளராக இருந்த நா.கார்த்திக் அப்பதவியில் இருந்து விடுவிக்கப்படுகிறார். திமுக தீர்மான குழு செயலாளராக நா.கார்த்திக் நியமிக்கப்படுகிறார். இவருக்கு பதிலாக, பீளமேடு பகுதி செயலாளராக இருந்த செந்தமிழ்செல்வன் மாநகர் மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார். ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள், செந்தமிழ்செல்வனுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்’ என்று கூறி உள்ளார்.
+
Advertisement